Wednesday, June 14, 2006

தொகுப்பு I - வகை: சாதி,மத பிரச்சனைகள்

குறிப்பு: இங்கு பின்னூட்டம் இடுவதை தவிர்த்து மூலப்பதிவில் இடவும்.
-------------------------------------------------------------------------------------

01-ஏப்ரல்-2006 அன்று -ல் இட்ட பின்னூட்டம்.
மூலம்: கோயில்களில் தமிழில் அர்ச்சனை வழிபாடு

தேவாரம், திருவாசகம், திருப்புகழ், திருப்பாவை, திருவெம்பாவை, கந்தர் சஷ்டி கவசம் என எத்தனையோ தமிழ் பாடல் தொகுப்புகள் தெய்வ சக்தி கொண்டவையாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப் பட்டு கோயில்களிலும் பாடப்பட்டு வருகிறது. இதைப்பற்றி ஏற்கனவே நிறையபேர் சொல்லிவிட்டார்கள். இவற்றைப்போல் இன்னும் புதிதாக வந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படும். அவ்வாறு, தூய்மையுடன் பக்தியுடன் சிறப்பாக எழுத ஊக்குவியுங்கள். அதைவிட்டு, சும்மா சமஸ்கிருதத்தை தமிழால் இடம்பெயர்க்கவேண்டும் என நினைப்பது வீண்வேலை. ஒரு மொழி சிறந்தது மற்றொன்று தாழ்ந்தது என்பதில் யாருக்கும் உடன்பாடு இருக்க முடியாது. 'நாய்' என்பதை சமஸ்கிருதத்தில் சொன்னால் அதற்குக்கூட மந்திர சக்தி உண்டென்று யாரும் சொல்லவில்லை. மந்திரம் என்பது உச்சரிக்கப்படுவதால் உடலுக்கும் உள்ளத்துக்கும் நன்மையை மேன்மையை பயப்பதாகும். சமஸ்கிருதத்தில் உள்ள ஸ்லோகங்கள் அத்தகைய செறிவுடன் ஞானியர்களால் வழங்கப்பட்டவையாக பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நம்பப்பட்டு வருகின்றன. திருப்புகழை பாடுவதால் உடலினுள் ஒவ்வொரு உறுப்பும் ஊக்கம்பெரும் என்பதும் அத்தகைய நம்பிக்கையே. அதனால்தான் அது மந்திரம். அதைவிட்டு விட்டு, இப்பொழுது நானும் நீங்களும் விவாதித்துக் கொண்டு இருக்கிறோமே இது மந்திரம் ஆகாது. அதுபோலத்தான் 'முருகா போற்றி', 'விநாயகா போற்றி' என்று 'போற்றி'யை சேர்ப்பதால் மட்டும் அது மந்திரமாகி விடாது. கந்தர் சஷ்டி கவசம் எத்தனை பிராமணர்களின் வீட்டில் ஒலிக்கப்படுகிறது என்று உங்களுக்கு தெரியுமா? புரிந்து கொள்ளுங்கள்.

தமிழின் சிறப்பு பற்றி பேசும் நாம், பிற மொழிகளின் சிறப்புகளை கற்றிருக்கிறோமா? தமிழிலும் பாடல்களும் கவிதைகளும் இருந்தபோதிலும் 'பாட்டுக்கு தெலுங்கு' எனவும் 'கவிதைக்கு உருது' எனவும் அவை தனித்தன்மை பெறுகின்றன. அதுபோலவே சமஸ்கிருதமும் மந்திரங்களுக்கான சிறப்புத்தன்மையை பெற்றிருக்கிறது என்பதில் மட்டும் ஏன் பிரச்சனை வருகிறது? இதுதான் 'மென்டல் ப்ளாக்', அதாவது 'சிந்தனைத் தடங்கு' எனப்படுகிறது. உடலுக்கு இருதய அடைப்பு எப்படியோ அப்படிதன் சமுதாயத்திற்கு இந்த சிந்தனைத் அடைப்பு அமைகிறது.

மற்றபடி தமிழை 'நீச பாஷை' என்றோ வேறுவிதமாகவோ இழிவு படுத்தினால் பொருத்துக் கொள்ள முடியாது.

எந்த ஒரு விவாதமானாலும் அதில் பிராமணர்களை அல்லது அது போன்ற ஒரு குறிப்பிட்ட சாதி, மத பிரிவினைரை தாக்கி எழுதுவது உங்களுக்கு பின்னூட்டங்களை வேண்டுமானால் அதிகரிக்கலாம். ஆனால், உண்மையில் இந்தப் பொய் முடிச்சுகளால் உங்கள் விவாதங்களை நீஙகளே நீர்த்துப்போகச் செய்கிறீர்கள்.

வலைப்பூவில் சாதி/மத விவாதம்:
பரமபிதா போன்ற ஒரு சிலர் பிராமணர்/இந்துமத விவாதங்களில் மட்டும் பின்னூட்டம் இடுபவர்களாக இருக்கலாம்.( அவர் தனியாக எதையும் பதிப்பிக்கிறாரா என தெரியாது). ஆனால் நான் தமிழ் பற்றாலும் இலக்கிய கலை ஆர்வத்தினாலும் தான் தமிழ் பதிவைத் தொட்ங்கினேன். என்னுடைய பலதரப்பட்ட பதிவையும்(http://vurathasindanai.blogspot.com/) பின்னூட்டங்களையும் பார்த்தால் அது தெரியும். அதே சமயத்தில் கண் முன்னே நடக்கும் இது போன்ற விவாதங்களில் பங்கேற்காமல் இருக்க முடியாது. டோன்டு ஐயாவைப் பாருங்கள், எத்தனை விதமான பதிவுகள்! அவருடைய அனுபவங்கள் நமக்கு எவ்வளவு விடயத்தைக் கொடுக்கின்றன். 'புகார் கடிதம் எழுதுவது' பற்றிய பதிவு எத்தகைய பயன்தரக்கூடியது! ஆனால் துவேஷம் செய்பவர்கள் அதைப்பற்றி மட்டும்தான் மாய்ந்து மாய்ந்து எழுதுகிறார்கள்.

கடவுளுக்கு சமஸ்கிருதம்தான் புரியும் என்றால் அது நகைப்புக்குரிய விசயம். பக்திக்கு உண்மையில் எந்த மொழியுமே தேவையில்லை.

கொசுறு:
நாத்திக/திராவிடவாதிகளுக்கு எந்த விசயத்திலும் நடுநிலைத்தன்மை இல்லை என்பது இந்த விசயத்திலும் பொருந்துகிறது. தமிழ்நாட்டு தர்காக்களில் அரேபிய மொழியைத்தவிர்த்து தமிழிலேயே பிரார்த்திக்கவேண்டும் என்று சொல்ல யாருக்காவது இங்கே ஆண்மை இருக்கிறதா?

0 Comments:

Post a Comment

<< Home