Wednesday, June 14, 2006

தொகுப்பு III - அரசியல்/சமூகம்/பொதுவானவை

குறிப்பு: இங்கு பின்னூட்டம் இடுவதை தவிர்த்து மூலப்பதிவில் இடவும்.
-------------------------------------------------------------------------------------
மூலம்: ஆணும் பெண்ணும் வலையில்
18-ஏப்ரல்-2006 அன்று இட்ட பின்னூட்டம்

பிரேமலதா,
தேசாந்திரியை எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும். நீங்கள் நினைப்பது போன்ற ஆள் கிடையாது அவர். ஆண்களுக்கும் பெண்களுக்கும் அடிப்படையில் பிடித்த விசயங்களில் வேறுபாடு இருக்கிறது. அதைப்பற்றிய தன்னுடைய கவனிப்பை எழுத நினைத்திருக்கிறார். உதாரணத்திற்கு ஆணகளுக்கு இருசக்கர வாகனத்தில் சுற்றித்திரிய பிடிக்கும். ஒரு சாகசம் போன்ற வீர விளையாட்டு போன்ற உணர்வு கிடைக்கும். இதே போன்ற உணர்வை பெண்களிடம் இருசக்கர வாகனம் ஓட்டும் விசயத்தில் எதிர்பார்க்க முடியாது. இதைப்போல்தான் தேசாந்திரி வலைப்பூவில் பெண்கள்(பெரும்பான்மை) தொடும் விசயங்களை கவனித்து எழுத நினைத்திருக்கிறார். அவருடைய அலசல் முழுமையானதாக இல்லை என்று நீங்கள் வாதிட்டிருக்காலாம்.

தேசாந்திரி,
இது போன்ற வேறுபாடுகளுக்குக் காரணம், ஆண்களின் மூளை அமைப்பும் பெண்களின் மூளை அமைப்பும் வேறுபட்டிருப்பதுதான் காரணம். மேலும் ஈஸ்ட்ரஜன் மற்றும் டெஸ்டொஸ்ட்ரொன் சுரக்கும் அளவுகளும் மாறுபட்டிருப்பது. சகோதரிகளே 'ஆணும் பெண்ணும் சமம்' என்று சொல்லி என்னிடம் சண்டைக்கு வரவேண்டாம். "why don't men listen and women can't read the map" என்ற புத்தகத்தைப் படித்து விளங்கிக் கொள்ளுங்கள்.
----------------
அங்கே மேலும் சொன்னது;

பொன்ஸ், நீங்களே சொல்லுங்கள் எத்தனைப் பெண்கள் உங்களைப்போலவே செயல்படுவார்கள்? உங்களுக்கு இணையான எக்ஸ்போசர் கொண்டவர்களையே கணக்கிலிடுங்கள். இன்னும் சில உதாரணங்கள் சொல்கிறேன். ஆசிரியர்களாக பணிபுரிவதில் ஆண்களை விட பெண்களின் திறமை அதிகம். குறிப்பாக மொழிப்பாடத்தில். ஆண்களிடம் என்ன நிறச் சட்டை என்றால், 'பச்சை' என்பார்கள். பெண்களோ, 'கிளிப்பச்சை' 'மயில்பச்சை', 'ராமர் பச்சை', 'கரும்பச்சை' என்று பல நிறங்கள் சொல்வார்கள். ஒரே சூழ்நிலையில் வளர்க்கப்பட்ட ஆணுக்கும் பெண்ணுக்குமிடையில் இந்த வேறுபாடு இருக்கும். இதற்கு காரணம் பெண்களுக்கு நிற உணர்வுக்கான செல்கள் அதிகம் இருக்கின்றன. இது அறிவியல் உண்மை. நான் சொன்னால் கதைவிடுகிறான் என்று சொல்வீர்கள் என்றுதான் புத்தக மூலத்தையும் கொடுத்துள்ளேன்.

வேறு நண்பர் சொன்னபடி,ஆணிடம் பெண்தன்மையும், பெண்ணிடம் ஆண் தன்மையும் கலந்து இருக்கும். ஒவ்வொரு ஆணிடமும் உள்ள பெண்தன்மையும் வேறுபடும். அதுபோல் உஙளிடம் சற்று ஆண்தன்மை கூடுதலாக இருக்கும்.

உங்கள் தோழிகளிடமே கேட்டுப்பாருங்கள், அவர்களுக்கு தாங்களாகவே வண்டி ஓட்டிச் செல்வது பிடித்திருக்கிறதா அல்லது கணவர் ட்ராப் செய்வது பிடித்திருக்கிறதா என்று !

----------------
அங்கே மேலும் சொன்னது;

//தேசாந்திரி ஜெனரலைஸ் செய்தது தப்பு.. //
பொன்ஸ், விவாதம், இந்த போக்கில் சென்றிருக்கலாம். அதைத்தான் நானும், //அவருடைய அலசல் முழுமையானதாக இல்லை என்று நீங்கள் வாதிட்டிருக்காலாம். // என்று முன்னறே சொன்னேன்.

ஆனால், அவரை ஆணாதிக்கவாதி போன்று முத்திரை குத்தி அதிக காரத்துடனே பின்னூட்டங்கள் இடப்பட்டிருக்கின்றன. உண்மையில் தேசாந்திரி மிகவும் மென்மையானவர். அதனால் இது என்மனதை பாதித்தது. நீங்கள் என்னை இப்படி விமர்சித்திருந்தால் கூட என்னை பாதித்திருக்காது. எனினும் இந்த பின்னூட்டங்கள் தேசாந்திரியின் எழுத்து நடையை செரிவாக்கும்(withoug ambuguties) என்று நம்புகிறேன்.

----------------அங்கே மேலும் சொன்னது;
ramachandranusha,
எழுதப்பட்டிருப்பதைப் பற்றி விவாதிப்பதில் தவறேதும் இல்லை. ஆனால் உங்கள் மூவரின் பின்னூட்டங்களில், 'எப்போ, எவன் சிக்குவான், பெண்ணியம் பேச' என்ற அடாவடி தொனி இருக்கிறது. அதிலும் பிரேமலதா ஒரு படி மேலே போய் மன்னிப்பு(இது பெரிய வார்த்தை, வருந்துகிறேன் என்று தேசாந்திரி சொல்லியிருக்கலாம்) கேட்டதைக்கூட அசிங்கப்படுத்த முயற்சித்து இருக்கிறார். அதுதான் நான் இவ்வளவு தூரம் எழுதுவதற்குக்காரணம். அதை வெருமனே கண்டித்தால் என்னையும் தூற்றியிருக்கக்கூடும். எனவேதான் உதாரண விளக்கங்களுடன் தேசாந்திரியின் இயல்பு பற்றியும் எழுதவேண்டி வந்தது. 'ஒருவேளை அப்படிப்பட்ட நோக்கத்தில் எழுதியிருக்கமாட்டாரோ' என்று உங்களை வேறு கோணத்தில் சிந்திக்க வைப்பதற்காகத்தான் அப்படி எழுதினேன். மற்றபடி, தேசாந்திரி உங்கள் பின்னூட்டங்களுக்கு வருத்தப்பட்டாரா என்று எனக்குத்தெரியாது.

-------------------------------------------------------------------------------------

மூலம்: கலைஞர் ஜனநாயகவாதியா?
06-ஏப்ரல்-2006 அன்று இட்ட பின்னூட்டம்

முத்து, நான் ஜெயாடீவி பற்றி சொல்லியுள்ளதற்கு மட்டும் விளக்கம் அளித்துள்ளீர்கள். சன்டீவியின் , மு.க.வின் ஜனநாயக செயல்பாடு குறித்து எளிதியுள்ளமைக்கு பதில் சொல்லவில்லை. அவற்றை ஒப்புக்கொள்கிறீர் தானே? சன்டீவி தனியார் நிறுவனம்தான். ஆனால் அது யார் ஆட்சியில் இருக்கிறார்கள் என்பதைப் பொருத்து ஆளுங்கட்சியாகவோ எதிர்கட்சியாகவோதான் செயல்படுகிறது என்பது எனக்கும் தெரியும், உங்களுக்கும் தெரியும். சன்டீவியின் செயல்பாடுகளுக்கும் தி.மு.க.விற்கும் தொடர்பில்லை என்று சொன்னால் நேற்று பிறந்த பிள்ளை கூட சிரிக்கும்...
- - - --

05-ஏப்ரல்-2006 அன்று இட்ட பின்னூட்டம்

ஜெயா டீவி வளர்க்கப்படாததற்கு காரணம் அதன் வருமானம் 'ஜெ'க்கு முக்கியமல்ல. சன் டீவியின் போலிப்பிரச்சாரத்துக்கு எதிராக செயல்பட அவருக்கும் ஓர் டீவி தேவைப்படுகிறது. ஆனால் சன் டீவிக்கு ஆட்சி, வருமானம் இரண்டும் வேண்டும் என்பதோடு, ஒன்றின் மூலம் மற்றொன்றைப் பெருவதிலும் ஆர்வம்.

ஒருநாள் சன்டீவியின் செய்தி பார்க்கிறேன். "ஒருவாரம் முன்பு தீ விபத்தில் பாதிக்கப்பட்ட தொலைபேசித்துறையின் அலுவலகம் விரைவாக சீரமைக்கப்பட்டு செயல்படத்துவங்கியது". ஏதேது, அரசைப் பாராட்டிக்கூட செய்தி வருகிறதா சன்டீவியில் என்று வியந்தேன். சற்று நேரத்திற்குப் பிறகுதான் அது மத்திய அரசின் துறை என்று.

சுனாமியின் போது தமிழக அரசு விரைந்து எடுத்த நடவடிக்கைகளை உலகம் முழுவதும் பாராட்டுகிறார்கள். நன்கு செயல்பட்ட அரசு அலுவலர்களை தங்கள் நாட்டுக்கு அழைத்து பயிற்சி கொடுக்கச்சொல்கிறார்கள். ஆனால், மு.க.வுக்கும் சன்டீவிக்கும் மட்டும் அது காதில் விழாது.

'வைகோ'வை இரண்டு வருடம் சன்டீவியில் காட்டாமல் மழுங்கடித்தார்களே அதுதானய்யா ஜனநாயகத்தின் உச்சம். வாழ்க உங்கள் ஜனநாயகம்.

குறிப்பு: 'ஜெ' யின் ஜெயாடிவியின் போக்கு சரி என்று நான் சொல்லவில்லை. சன்டீவியின், கருணாநிதியின் போக்கு எல்லாமே ஜனநாயக முறைக்கு உட்பட்டதன்று என்றுதான் சொல்ல விழைகிறேன்.

0 Comments:

Post a Comment

<< Home