Friday, June 30, 2006

தனியார் துறையில் இடஒதுக்கீடு

மூலம் : எங்கே செல்கிறது இந்த இடஒதுக்கீடு?

நல்ல பதிவுதான். என்ன செய்வது, பலரும் சொல்லிவிட்ட சொல்ல நினைக்கும் விசயம்தான். ஆனாலும், செவிடன் காதில் ஊதிய சங்காகிவிட்டதால் பலரும் விவாதத்தில் பங்குபெறக்கூட முடியாமல் சோர்ந்துவிட்டனர். சோர்வடையாதவர்கள் அவ்வப்போது சொல்லிக்கொண்டு இருக்கத்தான் வேண்டும்.

ஆனால் ஒன்று மட்டும் உறுதியாகச்சொல்வேன். தனியார் நிறுவனங்கலில் இட ஒதுக்கீடானால், மைக்ரோ சாஃப்ட், சன், ஐ.பி.எம். போன்ற நூற்றுக் கணக்கான பன்னாட்டு நிறுவனங்கள் மூட்டை கட்டிக்கொண்டு போய்விடும். புதிய உலக நிறுவனங்கள் ஒன்றும் இந்தியாவுக்கு வராது.ஃபோர்டு, ஹுன்டாய் எல்லாம் சென்னையில் இருக்காது. பரவாயில்லையா எனக்கேட்டுச் சொல்லுங்கள். இதற்கும், 'எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை அவர்களுக்கு இரண்டு கண்ணும் போகவேண்டும்' என்ற ரீதியில் ஏதாவது சொல்வார்கள். ஆர்வமாகக் காத்திருக்கலாம்.

பிரதமர் இன்னொன்றயும் சிந்திக்கல்லாம். இந்தியாவுக்காக விளையாட்டுகளில் கலந்துகொள்பவர்களையும் இட ஒதுக்கீடு முறையில் தேர்ந்தெடுக்கலாம்.

------------------------ -----------------------------

//"i made my point..பெருந்தலைகள் வந்து அரிய கருத்துக்களை கூற ஆரம்பித்துவிட்டதால நான் ஜகா வாங்குகிறேன்.நன்றி"//

நானும் நிறைய விவாதங்களில் பார்த்துவிட்டேன். தர்க ரீதியிலான சில நேர்மையான கேள்விகளுக்கு அவர்கள் யாரும் பதில் அளிப்பதே இல்லை. மதரீதியான இட ஒதுக்கீடு ஆந்திராவில் 2 முறை கொண்டுவரப்பட்டு அது இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்திற்கு எதிரானது என உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் கருணாநிதி தமிழகத்தில் முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு தரப்படும் என கூறுகிறார். கலைஞரின் இந்த சட்டவிரோதப் போக்கை எதிர்கிறோம் என்றெல்லாம் இவர்கள் கூற முன்வர மாட்டார்கள்.

ஃபோர்ட், ஹுன்டாய் எல்லாம் சென்னைக்கு வராவிட்டால் பரவாயில்லையா என்று கேட்டிருக்கிறேன் அல்லவா? அதற்கெல்லாம் பதில் அளிக்காமல் தப்பித்துக்கொள்வதற்குத் தான், இந்தா ஜகா வாங்கல் !

--------------------- ----------------------------

வாய்ஸ் ஆஃப் வின்ட், தருக்கரீதியிலான விவாதத்திற்கு வந்ததற்கு நன்றி.

1. பன்னாட்டு நிறுவனங்கள் ஒரு சில சலுகைகளுக்காக தங்கள் போட்டியிடும் தன்மையை குறைத்துக்கொள்ள முன்வரும் என்று நான் நினைக்கவில்லை. ஒரு சில இந்திய நிறுவனங்கள் முன்வரலாம். அப்படி ஒருசில தனியார் நிறுவனங்கள் செயல்படுத்தினால் பிற நிறுவனங்களிலும் வேண்டும் என்று மீண்டும் கொடிபிடிக்க மாட்டோமா? முடிவுகள் பிரச்சனை வலுக்கும் முன்னறே எடுக்கப்படவேண்டும். மேலும் சிக்கலாக்கக்கூடாது.

2. விளையாட்டில் இட ஒதுக்கீடு நான் கொண்டுவர சொல்லவில்லை. தனியார் துறையில் இட ஒதுக்கீடு என்பது எவ்வளவு அபத்தமாக இருக்கும் என்பதை குறிப்பால் உணர்த்துவதற்காகச் சொன்னேன். இன்றைய தேர்வு முறையில் குறைகள் இர்ந்தால் களையப்படவேண்டுமே ஒழிய அங்கே இருப்பதால் மற்ற துறைகளிலும் வரட்டும் என்பது என்ன வாதம்?
ஒலிம்பிக்குகு கூட இப்படி ஸோனல் அடிப்படையில்தான் தேர்ந்தெடுத்து அனுப்புகிறார்களா என்று தெரியாது. அப்படியானால் அடுத்தமுறை விக்ரம் ரதோரை அனுப்ப முடியாது. வேறு மாநிலத்தை அல்லது ஸோனை சேர்ந்தவரைதான் அனுப்ப முடியும்.

3. முஸ்லீம்களை பிற்படுத்தப்பட்ட வகுப்பின் கீழ் சேர்த்து ஒதுக்கீடு அழிப்பதில் யாருக்கும் பிரச்சனை இல்லை. ஏற்கனவே இது நடைமுறையில் இருக்கிறது. மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு கூடாது என்பதுதான் வாதம். அதைத்தான் உச்சநீதி மன்றமும் கூறுகிறது.

4. இன்னொரு நணபர் கேட்டிருக்கும் கேள்விக்கும் பதில் சொல்லுங்கள். அதை சற்று விளக்கமாக முன்வைக்கிறேன்.

சென்னையில் உள்ள மென்பொருள் கம்பெனிகளில் 50% வரை தமிழர்கள் இருக்கிறார்கள். ஆனால் பெங்களூரில் கன்னடிகள் 10% தான் இருப்பர். சரியான புள்ளி விவரங்கள் இருந்தால் யாராவது கொடுங்கள். பிற மாநிலத்தவர்கள் வந்து பிழைப்பதால் கன்னடிகள் பெரும் கோபத்தில் இருக்கின்றனர். அதனால் வன்முறைகளும் அவ்வப்போது நடக்கின்றன. இப்போது அவர்கள் செய்யவேண்டியது என்ன? தங்கள் மாநிலத்தில் கல்வித் தரத்தை உயர்த்தி சிறப்புப் பயிற்சிகள் கொடுத்து தமிழர்களுக்கு , தெலுங்கற்களுக்கு இணையாக போட்ட்டி போடுவதா? அல்லது கன்னடிகளுக்கு 50% இட ஒதுக்கீடு வேண்டும் என்று போராடுவதா?

------------------------------ --------------------------------------


5. Voice on Wings, பன்னாட்டு நிறுவனங்கள் ஜாதி வாரியான இட ஒதுக்கீட்டை(கவனிக்கவும், ஜாதி அடிப்படையிலான ஒதுக்கீடு) ஏற்றுக் கொள்வார்கள் என நீங்கள் சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. மைக்ரோ சாஃப்ட் அண்ணா பல்கலைக் கழகத்தில் படிக்கும் 500 க்கும் மேற்பட்ட மாணவர்களில் 6 பேரை மட்டும் தேர்வு செய்து மாதத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் தருவது அம்மாணவர்கள் அதிக திறமை கொண்டிருப்பதனால்தானே? போட்டியிடும் தன்மை(competency) அதிகம் இருப்பதனால்தானே? இல்லை என்றால் வேறு என்ன காரணங்கள் என்று எனக்கு புரியும் படி விளக்குங்கள். மற்ற மாணவர்களுக்கு ஏன் 20 ஆயிரம் முதல் அதிகபட்சம் 50 ஆயிரம் வரை மட்டுமே சம்பளம் கிடைக்கிறது? நீங்கள் சொல்லும் ஒதுக்கீட்டின்படி தேர்வு செய்தால் அந்த 6 பேர் மட்டியல் மாறுபடும்.

6. கன்னடிகள் திறமைசாலிகளா இல்லையா என்பதை ஒதுக்கிவைத்து விடலாம். ஆனால் அவர்கள் தகுதியை வளர்த்துக்கொள்வதில் பின்தங்கி விட்டனர் என்பதுதான் உண்மை. ஆந்திராவிலும் தமிழ்நாட்டிலும் இருப்பதுபோல் அங்கு ஏகப்பட்ட பொறியியல் கல்லூரிகளும் கல்வி நிறுவனங்களும் கர்நாடகத்தில் இல்லை. இப்பொழுதுதான் விழித்துக்கொண்டு துவங்கி இருக்கிறார்கள். கேரளாவில் தனியார் பொறியியல் கல்லூரிகள் துவங்க அனுமதி வழங்கப்பட்டு ஒரு சில வருடங்கள் தான் ஆகின்றன. தமிழ்நாட்டில் 1984-லியே தொடங்கப்பட்டுவிட்டன. இதனால்தான் தமிழர்களும் தெலுங்கர்களும் கோலோச்சுகின்றனர். நீங்கள் சொல்லும் கம்பெனிகளின் எண்ணிக்கை எல்லாம் காரணம் கிடையாது. வேண்டுமானால் பம்பாயில் இருக்கும் மென்பொருள் வல்லுனர்களில் எத்தனை சதவிகிதம் தெலுங்கர்களும், தமிழர்களும், கன்னடிகளும் இருக்கிறார்கள் என்று கேட்டுப்பாருங்கள்.(அகில இந்திய அளவிலும் ஒப்பிட்டுப் பார்க்கலாம் !). நான் சொல்லும் உண்மை புரிந்தால் இங்கே வந்து ஒப்புக்கொள்ளுங்கள்.

7. மு.சுந்தரமூர்த்தி கூறியுள்ளதில் பின்வருபவை அடிக்கோடிட வேண்டியவை.
//"ஒரு வேலைக்கு ஒரே மாதிரியான தகுதியும், திறமையுள்ளவர்களும் போட்டியிட்டால் ஏற்கனவே குறைந்த அளவு பிரதிநிதித்துவம் பெற்ற பிரிவினருக்கு (பொதுவாக கருப்பர்கள், பெண்கள்) முன்னுரிமை அளிக்கப்படவேண்டும்." //
முதலில் தகுதிதான் பார்க்கப்படும். இருவரிடையே தகுதி சமமாக இருந்து யாரைத்தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் வந்தால்தான் நீங்கள் கூறும் ஒதுக்கீடு அங்கே கருத்தில் கொள்ளப்படும். ஆனால் இங்கே அவர் குறிப்பிட்டிருக்கும் தகுதியும் திறமையும் 'ஜல்லி' எனப்படுகிறது. முதலில் நீங்கள் அந்தப்பணி எந்த ஒதுக்கீட்டுக்கு என்று முடிவு செய்துவிட்டுத்தான் அவர்களுள் யார் திறமைசாலி,தகுதியுடையவர் என்று பார்க்கவேண்டும்.

8. நீங்கள் மக்கள் தொகையில் OBC எத்தனை சதவிகிதமோ, MUSLIMS எத்தனை சதவிகிதமோ அதற்குத் தகுந்தாற்போல் இட ஒதுக்கீடுவேண்டும் என்று சொல்கிறீர்கள். சரி அதுபோல் மேல்சாதியினருக்கும் கொடுக்கலாம் அல்லவா? இந்திய அளவில் 30% தேறுமா? பிராமணர்கள் மட்டும் இந்திய அளவில் 16% இருப்பதாக படித்த ஞாபகம். மேலும் பல சாதியினர் OC (other caste) பிரிவில் உள்ளனர். பிராமணர்கள்தான் பாதிக்கப்படுவதாக கருதுவதும் தவறு. நாயர்கள் தமிழ் நாட்டில் ஓ.சி. தான்.(கேரளாவில் எப்படி என்று தெரியவில்லை). மேலும் சில செட்டியார்கள்,பிள்ளைகள் என பலரும் ஓ.சி.தான். இதே போல் வட இந்தியாவிலும் நிறைய ஓ.சி. பிரிவில் வரும் சாதிகள் இருக்கும். 20% முதல் 30% வரும் என நான் நினைக்கிறேன். இந்த முறைப்படி 100% கூட பிரித்துக் கொள்ளலாம். இதுதான் நீங்கள் சொல்லும் முறைப்படி சம வாய்ப்பாக இருக்கும்.

தீர்வு: ஜாதி அடிப்படையில் இல்லை என்றால் வேறு எப்படி இட ஒதுக்கீடு கொடுப்பது என்று கேட்கிறார்கள் சிலர். இதோ இங்கே சொல்கிறேன்.

இன்று இலவச அரிசியிலிருந்து, வீட்டுமனைப் பட்டா, இலவச வேட்டி சேலை, சத்துணவு எல்லாம் எப்படி செயல் படுத்தப்படுகின்றன்? பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளவர்களுக்கு கொடுக்கப்படுகின்றன். இலவச கலர் டீவி கூட ரேசன் அட்டையைக்கொண்டு பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளவர்களுக்குக் கொடுக்கப்போவதாக அரசியல் கட்சிகள் கூறுகின்றன. ஜாதி வாரியாக பிரிக்காமல் குடும்ப வருமானத்தின் அடிப்படையில் முன்தங்கியுள்ளவர், பின்தங்கியுள்ளவர், மிகவும் பின்தங்கியுள்ளவர், வருமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர் என நான்கு வகையாக்ப் பிரித்து இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்தலாம். உடனே யாரும் உண்மையான வருமானத்தை சொல்லமாட்டர்கள் என்று தடுக்காதீர்கள். சரியான முறையில் செயல்படுத்தவேண்டியது அரசின் கடமை. இன்றும் உண்மையில் ஒரு சாதியும், இட ஒதுக்கீட்டுக்காக ஜாதிமாற்றி சான்றிதழ் வைத்திருப்பவர்கள் பலர் இருப்பதை நான் காட்ட முடியும்.

என்ன நண்பர்களே,இரண்டு தீர்வுகளை முன் வைத்திருக்கிறேன். விவாதிப்போம்...

------------------------ -----------------------------

where has gone Mr.voice of wings..?

------------------------ -----------------------------
voice of wings, நீங்களும் பின்வாங்கி விட்டீர்கள். இரண்டு விதமான தீர்வுகளை முன்வைத்திருக்கிறேன். அதைப் பற்றி விவாதிக்க முன்வரவில்லை.

//நீங்கள் தேசிய அளவில் உயர்சாதியினர் 30% இருப்பார்களா என்றெல்லாம் கேட்டதால் பயந்து போய் ஓடியதும் ஒரு காரணமாக இருக்கலாம். ஏனென்றால், ஜனத்தொகையில் தலித் மற்றும் பழங்குடியினர் 25%, பிற்பட்டோர் சுமார் 50%, மற்றும் இஸ்லாமியர்கள் 13.5% என்பதுதான் நான் அறிந்த கணக்கு. எஞ்சியிருப்பது 10-15%.இதில் நீங்கள் உயர்சாதியினருக்கு 30% இட ஒதுக்கீடு கேட்கிறீர்கள் போல் தெரிகிறது :)//

உயர்சாதியினர் எத்தனை சதவிகிதம் என்று எனக்குத் தெரியாததால் தான் கேள்வி எழுப்பி இருக்கிறேன். ஆனால் விவாதம் அதைப் பற்றியது அல்ல. உயர்சாதியினருக்கும் அவர்கள் சதவிகிதப்படி ஒதுக்கீடு கொடுத்து 100% இட ஒதுக்கீடு என்ற கருத்துக்கு தயாரா? என்றுதான் கேள்வி எழுப்பி இருக்கிறேன். அதுவும் நீங்கள் முன்வைத்த பிரதிநிதித்துவம் அடிப்படையிலான இட ஒதுக்கீடு என்பதை சற்றே விரிவாக்கி, அவ்வளவுதான்.

------------------ --------------------------

//மலைகளில் வாழும் இந்நாட்டின் மைந்தர்களை பள்ளிகளில் கொண்டு வர திறமை பார்த்தால் முடியுமா?//

இறைநேசன், உங்கள் கனிவு புரிகிறது. பள்ளிகளில் இட ஒதுக்கீடு என்ற பிரச்சனை இல்லை. கல்லூரிகளில் தான் இருக்கிறது. மேலும், கல்லூரிகளில் இடம் பிடிக்க தேவை தரமான அடிப்ப்டைக் கல்வி. மலைவாழ் மக்களுக்கு தரமான அடிப்படைக் கல்வி தேவை. அதை அரசாங்கம் செய்திருக்கிறதா? செய்து கொடுக்க முடியாதா? ஏன் செய்யவில்லை? காசு எவ்வளவு கொடுக்கிறாயோ அதற்குத் தகுந்தாற்போல் தான் அடிப்படைக் கல்வியின் தரம் என்ற நிலைமையை அரசாங்கம் கட்டிக்காப்பது ஏன்? ஏனென்றால் அப்போதுதான் அவர்களுக்கு ஓட்டு வங்கி நிலைக்கும். என்னால்தான் உனக்கு இட ஒதுக்கீடு, அதனால்தான் உனக்கு 3 வேளைச் சோறு என்ற என்னத்தை மக்களிடையே நிலைத்திருக்கச் செய்வதுதான் அரசியல்வாதிகளின் நோக்கம். அரசுப் பள்ளிகளின் தரம் மேன்மேலும் குறைந்து கொண்டே போவதை எதிர்த்து ராமதாஸ்களோ, வாய்ஸ் ஆப் வின்ங்ஸ்களோ, முத்து தமிழினிகளோ ஏன் போராடுவதில்லை? சென்னையிலும் மதுரையிலும் மட்டுமே நுழைவுத்தேர்வு பயிற்சி கொடுக்கும் எக்ஸல் நிறுவனத்திற்கு இணையான பயிற்சியை பட்டிதொட்டி எங்கும் இலவசமாக அரசு ஏன் வழங்கக் கூடாது? 100 மீட்டர் ஓட்டப்போட்டிக்கு தேவையான உடல் வலிமையயும் பயிற்சியையும் பெற உதவாமல் நீ 80 மீட்டர் ஓடினால் போதும் என்ற விதி எப்படி அவர்கள் சுய சார்பு அடைய உதவும்? இந்த விதியை நீக்கவேண்டும் என்று கூட யாரும் சொல்லவில்லை. 80 மீட்டராகவே இருக்கட்டும், இனியாவது அடிப்படையை கவனியுங்கள், 60 மீட்டராக குறைப்பது ஆரோக்கியமன்று என்றுதான் சொல்கிறோம்.

--------------------- --------------------------------

0 Comments:

Post a Comment

<< Home