Sunday, November 30, 2008

மென் துறையில் பெண்கள் உப்புக்குச் சப்பானியா..? பதிவில் நான் இட்ட பின்னூட்டம்.

வள்ளி,ஒரு அவசியமான பதிவை போட்டிருக்கிறீர்கள். பின்னூட்டம் எழுதியுள்ள பலரும் நீங்கள் சொல்லவந்ததை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று தெரிகிறது. அழகிய பெண்களுக்கு சுலபமாக வாய்ப்புகள் கிடைக்கின்றன என நீங்கள் சொல்லவந்ததை ஏற்கத்தான் வேண்டும். சில கம்பெனிகள் அழகான பெண்களைத்தான் கேம்பசில் தேர்ந்தெடுப்பார்கள் என்று நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆனால் அது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. சர்வீசஸ் கம்பெனிகள் தொழில் நுட்பத் திறமைகளைவிட கம்யூனிகேசன் திறமைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து தேர்ந்தெடுத்திருக்கலாம்;அதை நாம் அழகான பெண்களைத் தேர்ந்தெடுத்ததாக தவறாக நினைத்திருக்கலாம். நாங்கள் கூட இண்டர்வியூ எடுக்கும்போது நல்ல ஃபிகரா வந்தா செலக்ட் பண்ணிரலாம் என்று விளையாட்டாகச் சொல்வதுண்டு. ஆனால் உண்மையில் அப்படி செய்யமாட்டோம்;ஏனெனில் பின்னால் எங்களுக்குதான் தலைவலி வரும் என்று தெரியும். ஆனால் ஒரு குறைந்தபட்ச சதவிகிதத்தினராவது இப்படி செய்வார்கள் என்று நாம் சந்தேகத்திற்கிடமின்றி யூகிக்கலாம்.

பெண்களிடம் டெக்னிகல் அறிவை பகிர்ந்துகொள்ள ஆண்கள் முன்வருவதில்லை என்று சொல்லியிருக்கிறீர்கள். ஏங்க வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுகிறீர்கள்? கணினிப் பொறியியல்தான் படித்தேன். முதல் மதிப்பெண் பெரும் பெண்கள்கூட மனப்பாடம் செய்து மதிப்பெண் வாங்கத்தான் நினைத்தார்களே ஒழிய புரொக்ராமிங்கில் ஆர்வம் காட்டவில்லை. நானாக லேபில் சில புரொக்ராம்களை விளக்கிச்சொன்னபோதும்(இத்தனைக்கும் அவர்கள் அழகான பெண்களுமில்லை) சக மாணவிகள் ‘செம போரடிக்கிறானே! சரியான மொக்கை!’ என்று நெளிந்தார்கள். இன்றும் என் நண்பர்கள் இதைச் சொல்லி எண்ணைக் கலாய்ப்பார்கள். இவ்வளவு பட்டும் அலுவலகத்தில் பெண்களிடத்தில் டெக்னிகலாக பேசி ’பழம்’ பட்டம் பெற எங்களுக்கு என்ன தலையெழுத்தா. கம்யூட்டர் லேபில் பவர் பாயிண்டில் கிராபிக்‌ஷ் 10 நிமிடம் காட்டிவிட்டு 1 மணி நேரம் கடலைபோடும் மைனர்களைத்தானே பெரும்பாலான மாணவிகளுக்குப் பிடித்திருக்கிறது?

0 Comments:

Post a Comment

<< Home