Friday, June 30, 2006

தனியார் துறையில் இடஒதுக்கீடு

மூலம் : எங்கே செல்கிறது இந்த இடஒதுக்கீடு?

நல்ல பதிவுதான். என்ன செய்வது, பலரும் சொல்லிவிட்ட சொல்ல நினைக்கும் விசயம்தான். ஆனாலும், செவிடன் காதில் ஊதிய சங்காகிவிட்டதால் பலரும் விவாதத்தில் பங்குபெறக்கூட முடியாமல் சோர்ந்துவிட்டனர். சோர்வடையாதவர்கள் அவ்வப்போது சொல்லிக்கொண்டு இருக்கத்தான் வேண்டும்.

ஆனால் ஒன்று மட்டும் உறுதியாகச்சொல்வேன். தனியார் நிறுவனங்கலில் இட ஒதுக்கீடானால், மைக்ரோ சாஃப்ட், சன், ஐ.பி.எம். போன்ற நூற்றுக் கணக்கான பன்னாட்டு நிறுவனங்கள் மூட்டை கட்டிக்கொண்டு போய்விடும். புதிய உலக நிறுவனங்கள் ஒன்றும் இந்தியாவுக்கு வராது.ஃபோர்டு, ஹுன்டாய் எல்லாம் சென்னையில் இருக்காது. பரவாயில்லையா எனக்கேட்டுச் சொல்லுங்கள். இதற்கும், 'எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை அவர்களுக்கு இரண்டு கண்ணும் போகவேண்டும்' என்ற ரீதியில் ஏதாவது சொல்வார்கள். ஆர்வமாகக் காத்திருக்கலாம்.

பிரதமர் இன்னொன்றயும் சிந்திக்கல்லாம். இந்தியாவுக்காக விளையாட்டுகளில் கலந்துகொள்பவர்களையும் இட ஒதுக்கீடு முறையில் தேர்ந்தெடுக்கலாம்.

------------------------ -----------------------------

//"i made my point..பெருந்தலைகள் வந்து அரிய கருத்துக்களை கூற ஆரம்பித்துவிட்டதால நான் ஜகா வாங்குகிறேன்.நன்றி"//

நானும் நிறைய விவாதங்களில் பார்த்துவிட்டேன். தர்க ரீதியிலான சில நேர்மையான கேள்விகளுக்கு அவர்கள் யாரும் பதில் அளிப்பதே இல்லை. மதரீதியான இட ஒதுக்கீடு ஆந்திராவில் 2 முறை கொண்டுவரப்பட்டு அது இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்திற்கு எதிரானது என உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் கருணாநிதி தமிழகத்தில் முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு தரப்படும் என கூறுகிறார். கலைஞரின் இந்த சட்டவிரோதப் போக்கை எதிர்கிறோம் என்றெல்லாம் இவர்கள் கூற முன்வர மாட்டார்கள்.

ஃபோர்ட், ஹுன்டாய் எல்லாம் சென்னைக்கு வராவிட்டால் பரவாயில்லையா என்று கேட்டிருக்கிறேன் அல்லவா? அதற்கெல்லாம் பதில் அளிக்காமல் தப்பித்துக்கொள்வதற்குத் தான், இந்தா ஜகா வாங்கல் !

--------------------- ----------------------------

வாய்ஸ் ஆஃப் வின்ட், தருக்கரீதியிலான விவாதத்திற்கு வந்ததற்கு நன்றி.

1. பன்னாட்டு நிறுவனங்கள் ஒரு சில சலுகைகளுக்காக தங்கள் போட்டியிடும் தன்மையை குறைத்துக்கொள்ள முன்வரும் என்று நான் நினைக்கவில்லை. ஒரு சில இந்திய நிறுவனங்கள் முன்வரலாம். அப்படி ஒருசில தனியார் நிறுவனங்கள் செயல்படுத்தினால் பிற நிறுவனங்களிலும் வேண்டும் என்று மீண்டும் கொடிபிடிக்க மாட்டோமா? முடிவுகள் பிரச்சனை வலுக்கும் முன்னறே எடுக்கப்படவேண்டும். மேலும் சிக்கலாக்கக்கூடாது.

2. விளையாட்டில் இட ஒதுக்கீடு நான் கொண்டுவர சொல்லவில்லை. தனியார் துறையில் இட ஒதுக்கீடு என்பது எவ்வளவு அபத்தமாக இருக்கும் என்பதை குறிப்பால் உணர்த்துவதற்காகச் சொன்னேன். இன்றைய தேர்வு முறையில் குறைகள் இர்ந்தால் களையப்படவேண்டுமே ஒழிய அங்கே இருப்பதால் மற்ற துறைகளிலும் வரட்டும் என்பது என்ன வாதம்?
ஒலிம்பிக்குகு கூட இப்படி ஸோனல் அடிப்படையில்தான் தேர்ந்தெடுத்து அனுப்புகிறார்களா என்று தெரியாது. அப்படியானால் அடுத்தமுறை விக்ரம் ரதோரை அனுப்ப முடியாது. வேறு மாநிலத்தை அல்லது ஸோனை சேர்ந்தவரைதான் அனுப்ப முடியும்.

3. முஸ்லீம்களை பிற்படுத்தப்பட்ட வகுப்பின் கீழ் சேர்த்து ஒதுக்கீடு அழிப்பதில் யாருக்கும் பிரச்சனை இல்லை. ஏற்கனவே இது நடைமுறையில் இருக்கிறது. மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு கூடாது என்பதுதான் வாதம். அதைத்தான் உச்சநீதி மன்றமும் கூறுகிறது.

4. இன்னொரு நணபர் கேட்டிருக்கும் கேள்விக்கும் பதில் சொல்லுங்கள். அதை சற்று விளக்கமாக முன்வைக்கிறேன்.

சென்னையில் உள்ள மென்பொருள் கம்பெனிகளில் 50% வரை தமிழர்கள் இருக்கிறார்கள். ஆனால் பெங்களூரில் கன்னடிகள் 10% தான் இருப்பர். சரியான புள்ளி விவரங்கள் இருந்தால் யாராவது கொடுங்கள். பிற மாநிலத்தவர்கள் வந்து பிழைப்பதால் கன்னடிகள் பெரும் கோபத்தில் இருக்கின்றனர். அதனால் வன்முறைகளும் அவ்வப்போது நடக்கின்றன. இப்போது அவர்கள் செய்யவேண்டியது என்ன? தங்கள் மாநிலத்தில் கல்வித் தரத்தை உயர்த்தி சிறப்புப் பயிற்சிகள் கொடுத்து தமிழர்களுக்கு , தெலுங்கற்களுக்கு இணையாக போட்ட்டி போடுவதா? அல்லது கன்னடிகளுக்கு 50% இட ஒதுக்கீடு வேண்டும் என்று போராடுவதா?

------------------------------ --------------------------------------


5. Voice on Wings, பன்னாட்டு நிறுவனங்கள் ஜாதி வாரியான இட ஒதுக்கீட்டை(கவனிக்கவும், ஜாதி அடிப்படையிலான ஒதுக்கீடு) ஏற்றுக் கொள்வார்கள் என நீங்கள் சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. மைக்ரோ சாஃப்ட் அண்ணா பல்கலைக் கழகத்தில் படிக்கும் 500 க்கும் மேற்பட்ட மாணவர்களில் 6 பேரை மட்டும் தேர்வு செய்து மாதத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் தருவது அம்மாணவர்கள் அதிக திறமை கொண்டிருப்பதனால்தானே? போட்டியிடும் தன்மை(competency) அதிகம் இருப்பதனால்தானே? இல்லை என்றால் வேறு என்ன காரணங்கள் என்று எனக்கு புரியும் படி விளக்குங்கள். மற்ற மாணவர்களுக்கு ஏன் 20 ஆயிரம் முதல் அதிகபட்சம் 50 ஆயிரம் வரை மட்டுமே சம்பளம் கிடைக்கிறது? நீங்கள் சொல்லும் ஒதுக்கீட்டின்படி தேர்வு செய்தால் அந்த 6 பேர் மட்டியல் மாறுபடும்.

6. கன்னடிகள் திறமைசாலிகளா இல்லையா என்பதை ஒதுக்கிவைத்து விடலாம். ஆனால் அவர்கள் தகுதியை வளர்த்துக்கொள்வதில் பின்தங்கி விட்டனர் என்பதுதான் உண்மை. ஆந்திராவிலும் தமிழ்நாட்டிலும் இருப்பதுபோல் அங்கு ஏகப்பட்ட பொறியியல் கல்லூரிகளும் கல்வி நிறுவனங்களும் கர்நாடகத்தில் இல்லை. இப்பொழுதுதான் விழித்துக்கொண்டு துவங்கி இருக்கிறார்கள். கேரளாவில் தனியார் பொறியியல் கல்லூரிகள் துவங்க அனுமதி வழங்கப்பட்டு ஒரு சில வருடங்கள் தான் ஆகின்றன. தமிழ்நாட்டில் 1984-லியே தொடங்கப்பட்டுவிட்டன. இதனால்தான் தமிழர்களும் தெலுங்கர்களும் கோலோச்சுகின்றனர். நீங்கள் சொல்லும் கம்பெனிகளின் எண்ணிக்கை எல்லாம் காரணம் கிடையாது. வேண்டுமானால் பம்பாயில் இருக்கும் மென்பொருள் வல்லுனர்களில் எத்தனை சதவிகிதம் தெலுங்கர்களும், தமிழர்களும், கன்னடிகளும் இருக்கிறார்கள் என்று கேட்டுப்பாருங்கள்.(அகில இந்திய அளவிலும் ஒப்பிட்டுப் பார்க்கலாம் !). நான் சொல்லும் உண்மை புரிந்தால் இங்கே வந்து ஒப்புக்கொள்ளுங்கள்.

7. மு.சுந்தரமூர்த்தி கூறியுள்ளதில் பின்வருபவை அடிக்கோடிட வேண்டியவை.
//"ஒரு வேலைக்கு ஒரே மாதிரியான தகுதியும், திறமையுள்ளவர்களும் போட்டியிட்டால் ஏற்கனவே குறைந்த அளவு பிரதிநிதித்துவம் பெற்ற பிரிவினருக்கு (பொதுவாக கருப்பர்கள், பெண்கள்) முன்னுரிமை அளிக்கப்படவேண்டும்." //
முதலில் தகுதிதான் பார்க்கப்படும். இருவரிடையே தகுதி சமமாக இருந்து யாரைத்தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் வந்தால்தான் நீங்கள் கூறும் ஒதுக்கீடு அங்கே கருத்தில் கொள்ளப்படும். ஆனால் இங்கே அவர் குறிப்பிட்டிருக்கும் தகுதியும் திறமையும் 'ஜல்லி' எனப்படுகிறது. முதலில் நீங்கள் அந்தப்பணி எந்த ஒதுக்கீட்டுக்கு என்று முடிவு செய்துவிட்டுத்தான் அவர்களுள் யார் திறமைசாலி,தகுதியுடையவர் என்று பார்க்கவேண்டும்.

8. நீங்கள் மக்கள் தொகையில் OBC எத்தனை சதவிகிதமோ, MUSLIMS எத்தனை சதவிகிதமோ அதற்குத் தகுந்தாற்போல் இட ஒதுக்கீடுவேண்டும் என்று சொல்கிறீர்கள். சரி அதுபோல் மேல்சாதியினருக்கும் கொடுக்கலாம் அல்லவா? இந்திய அளவில் 30% தேறுமா? பிராமணர்கள் மட்டும் இந்திய அளவில் 16% இருப்பதாக படித்த ஞாபகம். மேலும் பல சாதியினர் OC (other caste) பிரிவில் உள்ளனர். பிராமணர்கள்தான் பாதிக்கப்படுவதாக கருதுவதும் தவறு. நாயர்கள் தமிழ் நாட்டில் ஓ.சி. தான்.(கேரளாவில் எப்படி என்று தெரியவில்லை). மேலும் சில செட்டியார்கள்,பிள்ளைகள் என பலரும் ஓ.சி.தான். இதே போல் வட இந்தியாவிலும் நிறைய ஓ.சி. பிரிவில் வரும் சாதிகள் இருக்கும். 20% முதல் 30% வரும் என நான் நினைக்கிறேன். இந்த முறைப்படி 100% கூட பிரித்துக் கொள்ளலாம். இதுதான் நீங்கள் சொல்லும் முறைப்படி சம வாய்ப்பாக இருக்கும்.

தீர்வு: ஜாதி அடிப்படையில் இல்லை என்றால் வேறு எப்படி இட ஒதுக்கீடு கொடுப்பது என்று கேட்கிறார்கள் சிலர். இதோ இங்கே சொல்கிறேன்.

இன்று இலவச அரிசியிலிருந்து, வீட்டுமனைப் பட்டா, இலவச வேட்டி சேலை, சத்துணவு எல்லாம் எப்படி செயல் படுத்தப்படுகின்றன்? பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளவர்களுக்கு கொடுக்கப்படுகின்றன். இலவச கலர் டீவி கூட ரேசன் அட்டையைக்கொண்டு பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளவர்களுக்குக் கொடுக்கப்போவதாக அரசியல் கட்சிகள் கூறுகின்றன. ஜாதி வாரியாக பிரிக்காமல் குடும்ப வருமானத்தின் அடிப்படையில் முன்தங்கியுள்ளவர், பின்தங்கியுள்ளவர், மிகவும் பின்தங்கியுள்ளவர், வருமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர் என நான்கு வகையாக்ப் பிரித்து இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்தலாம். உடனே யாரும் உண்மையான வருமானத்தை சொல்லமாட்டர்கள் என்று தடுக்காதீர்கள். சரியான முறையில் செயல்படுத்தவேண்டியது அரசின் கடமை. இன்றும் உண்மையில் ஒரு சாதியும், இட ஒதுக்கீட்டுக்காக ஜாதிமாற்றி சான்றிதழ் வைத்திருப்பவர்கள் பலர் இருப்பதை நான் காட்ட முடியும்.

என்ன நண்பர்களே,இரண்டு தீர்வுகளை முன் வைத்திருக்கிறேன். விவாதிப்போம்...

------------------------ -----------------------------

where has gone Mr.voice of wings..?

------------------------ -----------------------------
voice of wings, நீங்களும் பின்வாங்கி விட்டீர்கள். இரண்டு விதமான தீர்வுகளை முன்வைத்திருக்கிறேன். அதைப் பற்றி விவாதிக்க முன்வரவில்லை.

//நீங்கள் தேசிய அளவில் உயர்சாதியினர் 30% இருப்பார்களா என்றெல்லாம் கேட்டதால் பயந்து போய் ஓடியதும் ஒரு காரணமாக இருக்கலாம். ஏனென்றால், ஜனத்தொகையில் தலித் மற்றும் பழங்குடியினர் 25%, பிற்பட்டோர் சுமார் 50%, மற்றும் இஸ்லாமியர்கள் 13.5% என்பதுதான் நான் அறிந்த கணக்கு. எஞ்சியிருப்பது 10-15%.இதில் நீங்கள் உயர்சாதியினருக்கு 30% இட ஒதுக்கீடு கேட்கிறீர்கள் போல் தெரிகிறது :)//

உயர்சாதியினர் எத்தனை சதவிகிதம் என்று எனக்குத் தெரியாததால் தான் கேள்வி எழுப்பி இருக்கிறேன். ஆனால் விவாதம் அதைப் பற்றியது அல்ல. உயர்சாதியினருக்கும் அவர்கள் சதவிகிதப்படி ஒதுக்கீடு கொடுத்து 100% இட ஒதுக்கீடு என்ற கருத்துக்கு தயாரா? என்றுதான் கேள்வி எழுப்பி இருக்கிறேன். அதுவும் நீங்கள் முன்வைத்த பிரதிநிதித்துவம் அடிப்படையிலான இட ஒதுக்கீடு என்பதை சற்றே விரிவாக்கி, அவ்வளவுதான்.

------------------ --------------------------

//மலைகளில் வாழும் இந்நாட்டின் மைந்தர்களை பள்ளிகளில் கொண்டு வர திறமை பார்த்தால் முடியுமா?//

இறைநேசன், உங்கள் கனிவு புரிகிறது. பள்ளிகளில் இட ஒதுக்கீடு என்ற பிரச்சனை இல்லை. கல்லூரிகளில் தான் இருக்கிறது. மேலும், கல்லூரிகளில் இடம் பிடிக்க தேவை தரமான அடிப்ப்டைக் கல்வி. மலைவாழ் மக்களுக்கு தரமான அடிப்படைக் கல்வி தேவை. அதை அரசாங்கம் செய்திருக்கிறதா? செய்து கொடுக்க முடியாதா? ஏன் செய்யவில்லை? காசு எவ்வளவு கொடுக்கிறாயோ அதற்குத் தகுந்தாற்போல் தான் அடிப்படைக் கல்வியின் தரம் என்ற நிலைமையை அரசாங்கம் கட்டிக்காப்பது ஏன்? ஏனென்றால் அப்போதுதான் அவர்களுக்கு ஓட்டு வங்கி நிலைக்கும். என்னால்தான் உனக்கு இட ஒதுக்கீடு, அதனால்தான் உனக்கு 3 வேளைச் சோறு என்ற என்னத்தை மக்களிடையே நிலைத்திருக்கச் செய்வதுதான் அரசியல்வாதிகளின் நோக்கம். அரசுப் பள்ளிகளின் தரம் மேன்மேலும் குறைந்து கொண்டே போவதை எதிர்த்து ராமதாஸ்களோ, வாய்ஸ் ஆப் வின்ங்ஸ்களோ, முத்து தமிழினிகளோ ஏன் போராடுவதில்லை? சென்னையிலும் மதுரையிலும் மட்டுமே நுழைவுத்தேர்வு பயிற்சி கொடுக்கும் எக்ஸல் நிறுவனத்திற்கு இணையான பயிற்சியை பட்டிதொட்டி எங்கும் இலவசமாக அரசு ஏன் வழங்கக் கூடாது? 100 மீட்டர் ஓட்டப்போட்டிக்கு தேவையான உடல் வலிமையயும் பயிற்சியையும் பெற உதவாமல் நீ 80 மீட்டர் ஓடினால் போதும் என்ற விதி எப்படி அவர்கள் சுய சார்பு அடைய உதவும்? இந்த விதியை நீக்கவேண்டும் என்று கூட யாரும் சொல்லவில்லை. 80 மீட்டராகவே இருக்கட்டும், இனியாவது அடிப்படையை கவனியுங்கள், 60 மீட்டராக குறைப்பது ஆரோக்கியமன்று என்றுதான் சொல்கிறோம்.

--------------------- --------------------------------

உயர் கல்வியில் இட ஒதுக்கீடு

மூலம்: இடஒதுக்கீடு என்றதுமே ஏண்டா குதிக்கிற?

அது ஏன்னாடா ஏற்கனவே இருக்கற இடஒதுக்கீடே உண்மையா உதவி தேவைப்படறவங்களுக்கு போகாதது நாலதான்டா..


கருணாநிதியோட பேரப்புள்ளைங்களுக்கும் அதே சாதில எங்கயோ பேர் தெரியாத கிராமத்துல இருக்கறவனுக்கும் ஒரே மாதிரி இட ஒதுக்கீடு. இதுல போட்டி போட்டு அந்த இடஒதுக்கீட அனுபவிக்கிறதும் முன்னேறிய கொழுத்த ஓ.பி.சி காரங்கதான் அதிகம். அதனாலதான்டா பொருளாதார வசதியையும் பெற்றோர்களோட கல்வித்தகுதியையும் கணக்குல எடுத்துகிட்டு உண்மையாக பின்தங்கி இருக்கறவங்களுக்கு மட்டும் இட ஒதுக்கீடு செய்யனும்னு சொல்றாங்க. அன்புமணியின் குழந்தைகளும் தயாநிதியின் குழந்தைகளும் பிற்படுத்தப் பட்டவங்களா? அவங்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கறதுனால பாதிக்கப் படறது நான் மட்டும் இல்ல, நீயும்தான். அத சரி செஞ்சா இருக்கற இட ஒதுக்கீடே போதும்.


அப்புறம் மீதி 50% என்னமோ அப்பர் கேஸ்டுக்கு குடுத்துருக்குற மாதிரி சில கேனப்பயலுக பேசறாங்க. நல்லா கண்ணத்தொறந்து பார்த்தா அந்த 50%-ல 90%(அதாவது மொத்ததுல 45%) சீட்டை அள்ளுறது ஓ.பி.சி. தான். அப்புறம் இட ஒதுக்கிட்டுல 27% ஆக 51% மக்கள்தொகை இருக்கற ஓ.பி.சி. மொத்தம் 72% சீட்டை புடிச்சிக்கறாங்க. அதுபோக பிரைவேட் காலேஜ்ல பணம் குடுத்து சேருறது. அதுக்க்கெல்லம் ஓ.சி. கிட்டயோ எஸ்.சி. கிட்டயோ பணம் கெடையாது. 15% சதவீதம் இருக்கும் ஓ.சிக்கு கிடைப்பது 5%மும் அதற்குக் கீழும்தான். அதற்கும் எந்த உத்திரவாதமும் கிடையாது. எஸ்.சி க்கு ஒதுக்கியிருக்கற சீட்டுகளே ஃபில் ஆகறது இல்லயாம். ஏன்னா, நெறைய பேரு ஸ்கூலையே தான்டறது இல்ல. சோ, பாதிக்கப் படறது ஓ.சி. தான். அப்புறம் கதறாம என்ன பன்றது? ஏற்கனவே இந்த 50% இட ஒதுக்கீடு யூ.ஜி.-ல இருக்கு. இப்போ பேச்சு பி.ஜி. பத்திதான். டாக்டருக்கு படிச்சப்புறமும் ரெண்டு டாட்கடரும் ஒன்னு கெடையாது அப்படின்னா, அவுங்க ப்ராக்டிஸ் பன்னும்போது இத்தனை சதவிகித நோயாளிகள் இந்த டாக்டர் கிட்டதான் போகனும்னு அடுத்து சட்டம்போடுவீங்களா? என்ன கன்ட்றாவிடா இது!

luckylook said...
கேவலமான மொழியில் பின்னூட்டம் இட்ட சாணக்கியன் என்பவரின் பின்னூட்டம் நிராகரிக்கப்பட்டிருக்கிறது... இதுபோன்ற ஜாதிவெறியர்களுக்கு எதிரான போலி டோண்டுவின் நிலைப்பாடு சரிதானோ என எண்ண வைக்கிறது.....

சாணக்கியன் said...
வலையுலக நண்பர்களே அவர் தலைப்பில் பயன்படுத்திய 'டா' வைத்தான் நானும் பயன்படுத்தி இருக்கிறேன். அதைத்தவிர வேறு எந்த வார்த்தையையும் பயன்படுத்தவில்லை. அவர் என்னுடைய பின்னூட்டத்தை வெளியிடாவிட்டால் அது ஒரு தனி பதிவாக வெளியிடப்படும்.

அதைப் படித்து அதில் தவறான வார்த்தைகள் இருக்கிறதா, ஜாதி வெறி இருக்கிறதா என்று நீங்களே புரிந்து கொள்ளலாம்.

Wednesday, June 14, 2006

தொகுப்பு III - அரசியல்/சமூகம்/பொதுவானவை

குறிப்பு: இங்கு பின்னூட்டம் இடுவதை தவிர்த்து மூலப்பதிவில் இடவும்.
-------------------------------------------------------------------------------------
மூலம்: ஆணும் பெண்ணும் வலையில்
18-ஏப்ரல்-2006 அன்று இட்ட பின்னூட்டம்

பிரேமலதா,
தேசாந்திரியை எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும். நீங்கள் நினைப்பது போன்ற ஆள் கிடையாது அவர். ஆண்களுக்கும் பெண்களுக்கும் அடிப்படையில் பிடித்த விசயங்களில் வேறுபாடு இருக்கிறது. அதைப்பற்றிய தன்னுடைய கவனிப்பை எழுத நினைத்திருக்கிறார். உதாரணத்திற்கு ஆணகளுக்கு இருசக்கர வாகனத்தில் சுற்றித்திரிய பிடிக்கும். ஒரு சாகசம் போன்ற வீர விளையாட்டு போன்ற உணர்வு கிடைக்கும். இதே போன்ற உணர்வை பெண்களிடம் இருசக்கர வாகனம் ஓட்டும் விசயத்தில் எதிர்பார்க்க முடியாது. இதைப்போல்தான் தேசாந்திரி வலைப்பூவில் பெண்கள்(பெரும்பான்மை) தொடும் விசயங்களை கவனித்து எழுத நினைத்திருக்கிறார். அவருடைய அலசல் முழுமையானதாக இல்லை என்று நீங்கள் வாதிட்டிருக்காலாம்.

தேசாந்திரி,
இது போன்ற வேறுபாடுகளுக்குக் காரணம், ஆண்களின் மூளை அமைப்பும் பெண்களின் மூளை அமைப்பும் வேறுபட்டிருப்பதுதான் காரணம். மேலும் ஈஸ்ட்ரஜன் மற்றும் டெஸ்டொஸ்ட்ரொன் சுரக்கும் அளவுகளும் மாறுபட்டிருப்பது. சகோதரிகளே 'ஆணும் பெண்ணும் சமம்' என்று சொல்லி என்னிடம் சண்டைக்கு வரவேண்டாம். "why don't men listen and women can't read the map" என்ற புத்தகத்தைப் படித்து விளங்கிக் கொள்ளுங்கள்.
----------------
அங்கே மேலும் சொன்னது;

பொன்ஸ், நீங்களே சொல்லுங்கள் எத்தனைப் பெண்கள் உங்களைப்போலவே செயல்படுவார்கள்? உங்களுக்கு இணையான எக்ஸ்போசர் கொண்டவர்களையே கணக்கிலிடுங்கள். இன்னும் சில உதாரணங்கள் சொல்கிறேன். ஆசிரியர்களாக பணிபுரிவதில் ஆண்களை விட பெண்களின் திறமை அதிகம். குறிப்பாக மொழிப்பாடத்தில். ஆண்களிடம் என்ன நிறச் சட்டை என்றால், 'பச்சை' என்பார்கள். பெண்களோ, 'கிளிப்பச்சை' 'மயில்பச்சை', 'ராமர் பச்சை', 'கரும்பச்சை' என்று பல நிறங்கள் சொல்வார்கள். ஒரே சூழ்நிலையில் வளர்க்கப்பட்ட ஆணுக்கும் பெண்ணுக்குமிடையில் இந்த வேறுபாடு இருக்கும். இதற்கு காரணம் பெண்களுக்கு நிற உணர்வுக்கான செல்கள் அதிகம் இருக்கின்றன. இது அறிவியல் உண்மை. நான் சொன்னால் கதைவிடுகிறான் என்று சொல்வீர்கள் என்றுதான் புத்தக மூலத்தையும் கொடுத்துள்ளேன்.

வேறு நண்பர் சொன்னபடி,ஆணிடம் பெண்தன்மையும், பெண்ணிடம் ஆண் தன்மையும் கலந்து இருக்கும். ஒவ்வொரு ஆணிடமும் உள்ள பெண்தன்மையும் வேறுபடும். அதுபோல் உஙளிடம் சற்று ஆண்தன்மை கூடுதலாக இருக்கும்.

உங்கள் தோழிகளிடமே கேட்டுப்பாருங்கள், அவர்களுக்கு தாங்களாகவே வண்டி ஓட்டிச் செல்வது பிடித்திருக்கிறதா அல்லது கணவர் ட்ராப் செய்வது பிடித்திருக்கிறதா என்று !

----------------
அங்கே மேலும் சொன்னது;

//தேசாந்திரி ஜெனரலைஸ் செய்தது தப்பு.. //
பொன்ஸ், விவாதம், இந்த போக்கில் சென்றிருக்கலாம். அதைத்தான் நானும், //அவருடைய அலசல் முழுமையானதாக இல்லை என்று நீங்கள் வாதிட்டிருக்காலாம். // என்று முன்னறே சொன்னேன்.

ஆனால், அவரை ஆணாதிக்கவாதி போன்று முத்திரை குத்தி அதிக காரத்துடனே பின்னூட்டங்கள் இடப்பட்டிருக்கின்றன. உண்மையில் தேசாந்திரி மிகவும் மென்மையானவர். அதனால் இது என்மனதை பாதித்தது. நீங்கள் என்னை இப்படி விமர்சித்திருந்தால் கூட என்னை பாதித்திருக்காது. எனினும் இந்த பின்னூட்டங்கள் தேசாந்திரியின் எழுத்து நடையை செரிவாக்கும்(withoug ambuguties) என்று நம்புகிறேன்.

----------------அங்கே மேலும் சொன்னது;
ramachandranusha,
எழுதப்பட்டிருப்பதைப் பற்றி விவாதிப்பதில் தவறேதும் இல்லை. ஆனால் உங்கள் மூவரின் பின்னூட்டங்களில், 'எப்போ, எவன் சிக்குவான், பெண்ணியம் பேச' என்ற அடாவடி தொனி இருக்கிறது. அதிலும் பிரேமலதா ஒரு படி மேலே போய் மன்னிப்பு(இது பெரிய வார்த்தை, வருந்துகிறேன் என்று தேசாந்திரி சொல்லியிருக்கலாம்) கேட்டதைக்கூட அசிங்கப்படுத்த முயற்சித்து இருக்கிறார். அதுதான் நான் இவ்வளவு தூரம் எழுதுவதற்குக்காரணம். அதை வெருமனே கண்டித்தால் என்னையும் தூற்றியிருக்கக்கூடும். எனவேதான் உதாரண விளக்கங்களுடன் தேசாந்திரியின் இயல்பு பற்றியும் எழுதவேண்டி வந்தது. 'ஒருவேளை அப்படிப்பட்ட நோக்கத்தில் எழுதியிருக்கமாட்டாரோ' என்று உங்களை வேறு கோணத்தில் சிந்திக்க வைப்பதற்காகத்தான் அப்படி எழுதினேன். மற்றபடி, தேசாந்திரி உங்கள் பின்னூட்டங்களுக்கு வருத்தப்பட்டாரா என்று எனக்குத்தெரியாது.

-------------------------------------------------------------------------------------

மூலம்: கலைஞர் ஜனநாயகவாதியா?
06-ஏப்ரல்-2006 அன்று இட்ட பின்னூட்டம்

முத்து, நான் ஜெயாடீவி பற்றி சொல்லியுள்ளதற்கு மட்டும் விளக்கம் அளித்துள்ளீர்கள். சன்டீவியின் , மு.க.வின் ஜனநாயக செயல்பாடு குறித்து எளிதியுள்ளமைக்கு பதில் சொல்லவில்லை. அவற்றை ஒப்புக்கொள்கிறீர் தானே? சன்டீவி தனியார் நிறுவனம்தான். ஆனால் அது யார் ஆட்சியில் இருக்கிறார்கள் என்பதைப் பொருத்து ஆளுங்கட்சியாகவோ எதிர்கட்சியாகவோதான் செயல்படுகிறது என்பது எனக்கும் தெரியும், உங்களுக்கும் தெரியும். சன்டீவியின் செயல்பாடுகளுக்கும் தி.மு.க.விற்கும் தொடர்பில்லை என்று சொன்னால் நேற்று பிறந்த பிள்ளை கூட சிரிக்கும்...
- - - --

05-ஏப்ரல்-2006 அன்று இட்ட பின்னூட்டம்

ஜெயா டீவி வளர்க்கப்படாததற்கு காரணம் அதன் வருமானம் 'ஜெ'க்கு முக்கியமல்ல. சன் டீவியின் போலிப்பிரச்சாரத்துக்கு எதிராக செயல்பட அவருக்கும் ஓர் டீவி தேவைப்படுகிறது. ஆனால் சன் டீவிக்கு ஆட்சி, வருமானம் இரண்டும் வேண்டும் என்பதோடு, ஒன்றின் மூலம் மற்றொன்றைப் பெருவதிலும் ஆர்வம்.

ஒருநாள் சன்டீவியின் செய்தி பார்க்கிறேன். "ஒருவாரம் முன்பு தீ விபத்தில் பாதிக்கப்பட்ட தொலைபேசித்துறையின் அலுவலகம் விரைவாக சீரமைக்கப்பட்டு செயல்படத்துவங்கியது". ஏதேது, அரசைப் பாராட்டிக்கூட செய்தி வருகிறதா சன்டீவியில் என்று வியந்தேன். சற்று நேரத்திற்குப் பிறகுதான் அது மத்திய அரசின் துறை என்று.

சுனாமியின் போது தமிழக அரசு விரைந்து எடுத்த நடவடிக்கைகளை உலகம் முழுவதும் பாராட்டுகிறார்கள். நன்கு செயல்பட்ட அரசு அலுவலர்களை தங்கள் நாட்டுக்கு அழைத்து பயிற்சி கொடுக்கச்சொல்கிறார்கள். ஆனால், மு.க.வுக்கும் சன்டீவிக்கும் மட்டும் அது காதில் விழாது.

'வைகோ'வை இரண்டு வருடம் சன்டீவியில் காட்டாமல் மழுங்கடித்தார்களே அதுதானய்யா ஜனநாயகத்தின் உச்சம். வாழ்க உங்கள் ஜனநாயகம்.

குறிப்பு: 'ஜெ' யின் ஜெயாடிவியின் போக்கு சரி என்று நான் சொல்லவில்லை. சன்டீவியின், கருணாநிதியின் போக்கு எல்லாமே ஜனநாயக முறைக்கு உட்பட்டதன்று என்றுதான் சொல்ல விழைகிறேன்.

தொகுப்பு II - தமிழ்/கலை/இலக்கியம்

குறிப்பு: இங்கு பின்னூட்டம் இடுவதை தவிர்த்து மூலப்பதிவில் இடவும்.
-------------------------------------------------------------------------------------

01-ஏப்ரல்-2006 அன்று இட்ட பின்னூட்டம்
மூலம்: எழுதவே ஈற்றடித் தா

நான் எழுதிய வெண்பா.

பழம்பெரும் பாட்டாளன் என்றே உணருமா
எழுதவே ஈற்றடி தா

--------
21-03-2006 அன்று இட்ட பின்னூட்டம்
மூலம்: அரங்கனே நின்தாள் சரண்

அகர முதல் எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகாம் - இரண்டாய்
உரக்கவே நீயும் பகர்வாய் உணர்ந்து
'அரங்கனே நின்தாள் சரண்'

தொகுப்பு I - வகை: சாதி,மத பிரச்சனைகள்

குறிப்பு: இங்கு பின்னூட்டம் இடுவதை தவிர்த்து மூலப்பதிவில் இடவும்.
-------------------------------------------------------------------------------------

01-ஏப்ரல்-2006 அன்று -ல் இட்ட பின்னூட்டம்.
மூலம்: கோயில்களில் தமிழில் அர்ச்சனை வழிபாடு

தேவாரம், திருவாசகம், திருப்புகழ், திருப்பாவை, திருவெம்பாவை, கந்தர் சஷ்டி கவசம் என எத்தனையோ தமிழ் பாடல் தொகுப்புகள் தெய்வ சக்தி கொண்டவையாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப் பட்டு கோயில்களிலும் பாடப்பட்டு வருகிறது. இதைப்பற்றி ஏற்கனவே நிறையபேர் சொல்லிவிட்டார்கள். இவற்றைப்போல் இன்னும் புதிதாக வந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படும். அவ்வாறு, தூய்மையுடன் பக்தியுடன் சிறப்பாக எழுத ஊக்குவியுங்கள். அதைவிட்டு, சும்மா சமஸ்கிருதத்தை தமிழால் இடம்பெயர்க்கவேண்டும் என நினைப்பது வீண்வேலை. ஒரு மொழி சிறந்தது மற்றொன்று தாழ்ந்தது என்பதில் யாருக்கும் உடன்பாடு இருக்க முடியாது. 'நாய்' என்பதை சமஸ்கிருதத்தில் சொன்னால் அதற்குக்கூட மந்திர சக்தி உண்டென்று யாரும் சொல்லவில்லை. மந்திரம் என்பது உச்சரிக்கப்படுவதால் உடலுக்கும் உள்ளத்துக்கும் நன்மையை மேன்மையை பயப்பதாகும். சமஸ்கிருதத்தில் உள்ள ஸ்லோகங்கள் அத்தகைய செறிவுடன் ஞானியர்களால் வழங்கப்பட்டவையாக பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நம்பப்பட்டு வருகின்றன. திருப்புகழை பாடுவதால் உடலினுள் ஒவ்வொரு உறுப்பும் ஊக்கம்பெரும் என்பதும் அத்தகைய நம்பிக்கையே. அதனால்தான் அது மந்திரம். அதைவிட்டு விட்டு, இப்பொழுது நானும் நீங்களும் விவாதித்துக் கொண்டு இருக்கிறோமே இது மந்திரம் ஆகாது. அதுபோலத்தான் 'முருகா போற்றி', 'விநாயகா போற்றி' என்று 'போற்றி'யை சேர்ப்பதால் மட்டும் அது மந்திரமாகி விடாது. கந்தர் சஷ்டி கவசம் எத்தனை பிராமணர்களின் வீட்டில் ஒலிக்கப்படுகிறது என்று உங்களுக்கு தெரியுமா? புரிந்து கொள்ளுங்கள்.

தமிழின் சிறப்பு பற்றி பேசும் நாம், பிற மொழிகளின் சிறப்புகளை கற்றிருக்கிறோமா? தமிழிலும் பாடல்களும் கவிதைகளும் இருந்தபோதிலும் 'பாட்டுக்கு தெலுங்கு' எனவும் 'கவிதைக்கு உருது' எனவும் அவை தனித்தன்மை பெறுகின்றன. அதுபோலவே சமஸ்கிருதமும் மந்திரங்களுக்கான சிறப்புத்தன்மையை பெற்றிருக்கிறது என்பதில் மட்டும் ஏன் பிரச்சனை வருகிறது? இதுதான் 'மென்டல் ப்ளாக்', அதாவது 'சிந்தனைத் தடங்கு' எனப்படுகிறது. உடலுக்கு இருதய அடைப்பு எப்படியோ அப்படிதன் சமுதாயத்திற்கு இந்த சிந்தனைத் அடைப்பு அமைகிறது.

மற்றபடி தமிழை 'நீச பாஷை' என்றோ வேறுவிதமாகவோ இழிவு படுத்தினால் பொருத்துக் கொள்ள முடியாது.

எந்த ஒரு விவாதமானாலும் அதில் பிராமணர்களை அல்லது அது போன்ற ஒரு குறிப்பிட்ட சாதி, மத பிரிவினைரை தாக்கி எழுதுவது உங்களுக்கு பின்னூட்டங்களை வேண்டுமானால் அதிகரிக்கலாம். ஆனால், உண்மையில் இந்தப் பொய் முடிச்சுகளால் உங்கள் விவாதங்களை நீஙகளே நீர்த்துப்போகச் செய்கிறீர்கள்.

வலைப்பூவில் சாதி/மத விவாதம்:
பரமபிதா போன்ற ஒரு சிலர் பிராமணர்/இந்துமத விவாதங்களில் மட்டும் பின்னூட்டம் இடுபவர்களாக இருக்கலாம்.( அவர் தனியாக எதையும் பதிப்பிக்கிறாரா என தெரியாது). ஆனால் நான் தமிழ் பற்றாலும் இலக்கிய கலை ஆர்வத்தினாலும் தான் தமிழ் பதிவைத் தொட்ங்கினேன். என்னுடைய பலதரப்பட்ட பதிவையும்(http://vurathasindanai.blogspot.com/) பின்னூட்டங்களையும் பார்த்தால் அது தெரியும். அதே சமயத்தில் கண் முன்னே நடக்கும் இது போன்ற விவாதங்களில் பங்கேற்காமல் இருக்க முடியாது. டோன்டு ஐயாவைப் பாருங்கள், எத்தனை விதமான பதிவுகள்! அவருடைய அனுபவங்கள் நமக்கு எவ்வளவு விடயத்தைக் கொடுக்கின்றன். 'புகார் கடிதம் எழுதுவது' பற்றிய பதிவு எத்தகைய பயன்தரக்கூடியது! ஆனால் துவேஷம் செய்பவர்கள் அதைப்பற்றி மட்டும்தான் மாய்ந்து மாய்ந்து எழுதுகிறார்கள்.

கடவுளுக்கு சமஸ்கிருதம்தான் புரியும் என்றால் அது நகைப்புக்குரிய விசயம். பக்திக்கு உண்மையில் எந்த மொழியுமே தேவையில்லை.

கொசுறு:
நாத்திக/திராவிடவாதிகளுக்கு எந்த விசயத்திலும் நடுநிலைத்தன்மை இல்லை என்பது இந்த விசயத்திலும் பொருந்துகிறது. தமிழ்நாட்டு தர்காக்களில் அரேபிய மொழியைத்தவிர்த்து தமிழிலேயே பிரார்த்திக்கவேண்டும் என்று சொல்ல யாருக்காவது இங்கே ஆண்மை இருக்கிறதா?